தீபம் ஏற்றும் எண்ணை தயாரிப்பு தித்திப்பு இலாபம்

தீபம் ஏற்றும் எண்ணை இன்று அதிக தேவை உள்ள ஓர் தொழில் ஆகும். அனைவர் வீட்டிலும் இன்று தீபம் ஏற்றும் எண்ணை பயன்படுத்தப் படுகிறது. எனவே குறைந்த முதலீடு கொண்டு இந்த தொழில் ஆரம்பித்து வருமானம் பெற முடியும்.
தேவைப்படும் பொருள்கள்:
பொதுவாக சொல்லுவது தேங்காய் எண்ணை, நல்ல எண்ணை, விளக்க எண்ணை, இழுப்பை எண்ணை,  அரிசி எண்ணை போன்ற எண்ணைகளை சரி சமமாக கலந்து தீபம் ஏற்ற வேண்டும். ஆனால் வணிக ரீதியாக இது சாத்தியம் இல்லை. ஏனெண்னில் மேலே கூறிய அனைத்து வகை எண்ணைகளும் ஒரு லிட்டர் ரூபாய் 150 க்கு மேல், மேலும் பாக்கிங், போக்குவர்த்து, கூலி போன்றவை சேர்த்தால் ஒரு லிட்டர் எண்ணை விலை ரூபாய் 200 க்கு மேல் வரும். விலை உயர்ந்த எண்ணையை மக்கள் விரும்பி வாங்க மாட்டார்கள். எனவே விலை குறைந்த எண்ணையை அதிக அளவில் கலந்து விற்பனை செய்தால் இலாபம் பெற முடியும். அரிசி எண்ணை லிட்டர் ரூபாய் 66 க்கு கிடைக்கும். எனவே இந்த வகை எண்ணையை அதிக அளவில் பயன்படுத்தலாம்.
செய்முறை:
  • அரிசி எண்ணை——– 30 லிட்டர்
  • தேங்காய் எண்ணை— 1 லிட்டர்
  • நல்ல எண்ணை——— 1 லிட்டர்
  • விளக்க எண்ணை—— 1 லிட்டர்
  • இழுப்பை எண்ணை—- 1 லிட்டர்
அனைத்து எண்ணைகளையும் ஒன்றாக கலந்து பெட் பாட்டில்களில் நிரப்பி, ஸ்டிகர் ஒட்டி விற்பனைக்கு  கொண்டு செல்லலாம்.
ஒரு லிட்டர் தயாரிக்க செலவு ரூபாய் 75 க்குல் வரும், கடைக்கு ரூபாய் 100க்கும், வாடிக்கையளருக்கு ரூபாய் 120 முதல் விற்பனை செய்யலாம்.
இலாபம்:
நாள் ஒன்றுக்கு 25 லிட்டர் எண்ணை விற்றால் கூட ரூபாய் 625 இலாபம் கிடைக்கும், மாதம் ரூபாய் 15000 குறைந்த இலாபம் பெற முடியும்.
பொருள்கள் கிடைக்கும் இடம் & முகவரி:
அண்ணமலை ஆயில் ஸ்டோர்————-90437 53592
பாட்டில் வாங்க——– 90478 48484
ஸ்டிகர்—— 9344101432
முதலீடு ரூபாய் 6000 ரூபாய் இருந்தால் போதும். இலாபம் பெற வாழ்த்துகள்.
சுய தொழில்
Reviewed by SIRUTHOZHILMUNAIVOR on ஜூன் 28, 2017 Rating: 5

கருத்துகள் இல்லை:

SIRUTHOZHIL IDEAS IN TAMIL

TAMIL BUSINESS NEWS

siruthozhilmunaivor.com. Blogger இயக்குவது.